சிந்தனை செய் மனமே
என்னுடைய பயிற்சி தோழர். அவருக்கு போன் பண்ணிணால் அவர் பையன் அல்லது பெண் போனை எடுப்பாங்க. யார்னு கேட்பாங்க. அப்பாவோட நண்பர், கொஞ்சம் பேசனும். " அப்பா வெளியே போயிருக்காங்க". "எப்ப வருவாங்க"? "இரவுதான் வருவாங்க" எப்ப போன் பண்ணிணாலும் இதுதான் நடக்கும். ஒருநாள் அவனுடைய ரேஞ்சரை பார்த்தேன். "இப்படி உங்க பாரஸ்டருக்கு போட்டால் அவன் எடுக்காமல் பிள்ளைகள் எடுத்து அப்பா வேலைக்கு போயிட்டார், எங்க போயிருக்கார்னு தெரியலைன்னு சொல்ராங்க"அவர் போன் பண்ணும் போது "நீங்க யாருன்னு சொன்னீங்கன்னு" என்னிடம் கேட்டார். நான் என் பெயரை சொல்லி அவரது நண்பர் முக்கிய விஷயம் பேசனும் என கூறியதாக சொன்னேன். அதுக்கு அவர் ஒரு ஜடியா கொடுத்தார் பாருங்கள். நீங்க கூட கடைபிடிக்கலாம். போன் பேசி பிள்ளைகள் எடுத்து யாருன்னு கேட்டால் காண்ட்ராக்டர் பேசுகிறேன், சாரிடம் அவசரமாக பேசனும்னு சொல்லுங்க. உடனே லைனில் வருவான்னு சொன்னார்.
ஆச்சரியம். அதுபோலவே செய்தேன். உடனே வந்துட்டான். ரொம்ப திட்டி என் நம்பரை சேவ் பண்ணி இனிமேலாவது நான் கூப்பிட்டால் பேசுன்னு சொன்னேன்.
அவனது ரேஞ்சரிடம் போன் பண்ணி விஷயத்தை கூறினேன். அவர் சொன்னார் நானே வெவ்வேறு நம்பரிலிருந்து காண்ட்ராக்டர்னு சொல்லித்தான் கூப்பிட்டு பேசுவேன். இல்லைன்னா காண்ட்ராக்டர் போனிலேயே கூப்பிடுவேன். உடனே எடுப்பான். என் போனில் கூப்பிட்டா ஆறு மாதம் கூப்பிட்டாலும் எடுக்க மாட்டான் என்றார்.
வனச்சரகராக எல்லோரும் வெற்றியடைய முடியாது என உணர்ந்தேன்.
கண்டிப்பாக சிரிக்க கூடாது
எனக்கு வன பயிற்சி 1983 ஜீன் 1 ல் ஆரம்பம். எனக்கு ஜுன் 18 ம் தேதிதான் ஆர்டர் வந்தது. 20 ம் தேதி வைகை அணை பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன். எனது மிக நெருங்கிய நண்பன் பயிற்சியில் சேர ஜீன் பத்தாம் தேதி வாக்கில் மதியம் வைகை அணை பயிற்சி பள்ளி ஆபீஸில் ஜாயினிங் ரிப்போர்ட் கொடுத்து விட்டு ஆஸ்டலுக்கு வந்து சேர்ந்தான். எல்லோரும் பீல்ட் ஓர்க் யூனிபார்மில் போய் கொண்டிருந்தார்கள். நண்பன் கொடுத்த அறிவுரை படி பெட்டி படுக்கைகளை ரூமில் வைத்து பீல்ட் ஒர்க் யூனிபார்ம் மாட்டி வேக வேகமாக நர்சரியில் அசெம்பிள் ஆக வரும் போது எல்லோரும் ரிப்போர்ட் பண்ணி பீல்டுக்கு போய் விட்டார்கள். ஆனால் மூணு வாத்தியார்கள் காக்கி பேண்ட் வெள்ளை சட்டையில் நர்சரியில் நின்று கொண்டிருந்தனர். நண்பனுக்கு தெரிந்து விட்டது.இவர்களிடம்தான் ரிப்போர்ட் பண்ணணும், ஏற்கனவே நண்பன் சொல்லியிருக்கிறான். இவனும் புத்திசாலி. நல்ல விரைப்பாக சல்யூட் அடிப்பான்.நண்பனுக்கு சிறிய குழப்பம். மூன்று பேரில் யாரிடம் ரிப்போர்ட் செய்வது. நண்பனின் மூளை வேகமாக முடிவெடுத்தது. மூவரில் இருவர் வயது குறைந்தவர்கள். ஒருவர் சற்று அனுபவசாலி தோற்றம், கண்ணாடி அணிந்திருந்தார். நண்பன் முடிவு பண்ணிணான். அவர் மூவரில் சீனியராக இருக்கலாம், எனவே அவரின் அருகில் சென்று மின்னல் வேகத்தில் விரைப்பாக சல்யூட் அடிக்க நண்பன் சல்யூட்அடித்ததை பார்த்த அந்த மனிதருக்கு கண்ணீல் கண்ணீர் வந்துட்டது. அவசர அவசரமாக நண்பனிடம் நான் பிளம்பர், நீங்கள் சாரிடம் ரிப்போர்ட் பண்ணுங்கள் என்று ஜைனுலாப்தீன் சாரை காட்டினார்.
பயிற்சி முடியும் வரை நண்பன் மீது பிளம்பருக்கு தனி மரியாதை. எப்போ TA பில்லுக்கு குட்ஸ் ரேட் லாரி ரசீது எது கேட்டாலும் உடனே வாங்கி கொடுப்பார். அவரிடம் ஜாயின் பண்ணியவன் ஆயிற்றே.
இதை நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் நானும் ஜீன் 20 ம் தேதி மதியம் அதே நேரம் தான் வந்தேன். ஆனால் நண்பர்கள் அண்ணாமலை, லோகநாதன் இருவரையும் பார்த்து அவர்கள் ரூமில் பெட்டியை வைத்து பீல்ட் டிரஸ் மாட்டி அவர்களை தனியே விடாமல் கூடவே வந்து கூட்டத்தில் சேர்ந்து ரிப்போர்ட் பண்ணினேன். இல்லையென்றால் நானும் நண்பனைபோல் பிளம்பர் அல்லது லாரி டிரைவர் யாரிடமாவது ஜாயின் பண்ணியிருக்க கூடும்.
No comments:
Post a Comment