Showing posts with label பெருச்சாளி மரம். Show all posts
Showing posts with label பெருச்சாளி மரம். Show all posts

Saturday 12 August 2017

பெருச்சாளி மரம்



மேற்கு தொடர்ச்சி மலையில்

கிருஷ்ணகிரியை சேர்ந்த என்னுடைய நெருங்கிய நண்பர் ருத்திரப்பா வனச்சரகர் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர்.  காடுகளில்  மரங்களை அடையாளம் கண்டு தாவரவியல் பெயர், தமிழ் பெயர், கன்னட பெயர் எல்லாம் உடனே சொல்லி விடுவார்.  கன்னடம் இவரது தாய் மொழி என்பது கூடுதல் சிறப்பு 

RESOURCES SURVEY DIVISION   

அப்போது 1980-82ல் Resources survey,  சேலம் கோட்டத்தில் வனவராக ஆக பணிபுரிந்து கொண்டிருந்தார்.  கோட்ட வன அலுவலர் மறைந்த திரு . சுப்பையா, .. ஆவார்.   அவர் வைகை அணை காணியல் பயிற்சி கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர்.  கீழ் அதிகாரிகளிடம் ஒழுக்கத்தையும் அறிவையும் போதிப்பவர். அப்போது வனச்சரகராக இருந்தவர் பெயர் தெரியவில்லை.  ஒவ்வொரு முகாமிலும் காடுகளுக்குள் நடந்து சென்று  என்னென்ன மரங்கள், தாவரங்கள்  இருக்கிறது என சர்வே செய்வது அவர்களின்  பணி.  வனச்சரகருக்கு மரங்களின் பெயர், தாவரங்களின் பெயர் பார்த்தவுடன் சொல்ல தெரியாது.  வனவருக்கு கணணியை விட வேகமாக சொல்ல கூடிய திறமை. இதை வைத்து DFO அவர்கள் எப்போதும் வனச்சரகரை குறை கூறுவது வழக்கம். முகாம் என்றாலே  வனச்சரகருக்கு மூடு அவுட் ஆகிவிடும்

பெருச்சாளி மரம்

ஒரு முறை காட்டினுள் DFO முதலிலும், வனச்சரகர் பின்னாலும், வனவர் அதன் பின்னாலும் ஒரு மேடான பகுதியில் ஏறி கொண்டிருக்கும் பொது ஒரு மரத்தை காட்டி DFO அவர்கள் வனச்சரகரிடம் இது என்ன மரம் என கேட்க, வனச்சரகருக்கு போச்சுடா இன்னைக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சுது ,  என நினைத்து கொண்டு பின்னால் திரும்பி ருத்திரப்பாவிடம் சைகையில் என்ன மரம் என கேட்கிறார்.   அவர் மரத்தின் பெயரை DFO க்கு கேட்காமல் " பச்சாளி என சன்னமான குரலில் கூற (Dalbergia paniculata விற்கு அந்த பகுதியில் உள்ள பெயர்)  சரகருக்கு சரியாக விளங்காமல் DFO விடம் "பெருச்சாளி" என்று கூறி விட்டார். DFO அதிர்ச்சியாகி, பிறகென்ன சரகருக்கு அடுத்த மூன்று மாதம் திருவிழா தான்.  சரகர் முகாம் முடித்து ருத்திரப்பாவிடம் கொஞ்சம் சத்தமாக சொன்னால் என்னையா?   என கேட்க ருத்திரப்பா சத்தமாக சொன்னால் DFO க்கு கேட்கும் என்பதால் மெதுவாக கூறினேன் என சமாதானம் கூற,  இருவருக்கும் ஏழாம்  பொருத்தம்தான். ( திரு . சுப்பையா, ..  அவர்கள் தான் நண்பர் ருத்திரப்பாவிற்கும் எனக்கும் கடிதம் எழுதி நட்பு ஏற்பட காரணமாக இருந்தார்.  நாங்கள் இருவரும் அப்போது வைகை அணை பயிற்சி கல்லூரியில் பயிற்சியாளர்கள் )  இப்போதும் அந்த மரத்தை எங்கு பார்த்தாலும் எனக்கு பெருச்சாளி  ஞாபகமும் நண்பர் ருத்திரப்பா ஞாபகம் தான் வரும்.